கேக் வெட்டி கொண்டாடிய மாமன்னன் TEAM… "SORRY மாரி செல்வராஜ் சார்..” உதயநிதி ‘ஜாலி’ ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Advertising
>
Advertising

மாமன்னன்


மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைண்டஹ்ன. அதையடுத்து இப்போது அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். போஸ்டரில் வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பெயரை முதலில் இடம்பெறச் செய்திருந்தனர் படக்குழுவினர்.

முதல் கட்ட படப்பிடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் துவங்கி ஏப்ரல் மாதத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் மாமன்னன் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதால் அவர் ரசிகர்களுக்கு இந்த இரு படங்களும் டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளன.

உதயநிதி ட்வீட்

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “மாமன்னன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மேடமும், ஃபஹத் பாசில் சாரும் தேதி கொடுத்தால்தான் நடக்கும். அதை பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்யுங்கள். உங்களுக்கு கொடுத்த தொல்லைகளுக்கும், one more காட்சிகளுக்கும் sorry. நன்றி மாமன்னன் குழு.” என குறிப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Maamannan second schedule wrapped udhay jolly tweet

People looking for online information on Keerthy Suresh, Maamannan, Mari Selvaraj will find this news story useful.