உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன AR RAHMAN.. கூடவே மாமன்னன் படத்தின் அசத்தல் GLIMPSE வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் 'கலகத் தலைவன்'.

Advertising
>
Advertising

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நித்தி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இன்று (27.11.2022) உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மு. மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' படக்குழுவும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மாமன்னன் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்னன் படக்குழு Glimpse வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உதயநித்தி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்கிறார். ஆரம்பத்தில் பேசும் ஏ.ஆர். ரஹ்மான், "மாமன்னன், உதயநிதி சாரோட ஃபர்ஸ்ட் படம், மாரி செல்வராஜோட ஃபர்ஸ்ட் படம் நான் பண்றேன். மாரி செலவராஜுடன் இணைந்து பணிபுரிவது இன்ட்ரெஸ்ட்டிங்காக உள்ளது. அவரது சிந்தனைகள் வித்தியாசமாக உள்ளது. அவரோட ஸ்டைலும் வித்தியாசமாக உள்ளது பணிபுரிவதற்கு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களே. நல்ல உடல் நலத்துடனும் சந்தோஷத்துடனும் நீடுழி வாழ்க" என ஏ.ஆர். ரஹ்மான் பேசி முடித்ததும் வீடியோவின் இறுதியில் உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியுடன் நிற்கும் மாமன்னன் படத்தின் வீடியோ ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Maamannan glimpse video on udhayanidhi stalin birthday

People looking for online information on AR Rahman, Fahadh Faasil, Keerthy Suresh, Maamannan, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.