சூப்பர் சிங்கரில் மா.கா.பா & மைனா நந்தினி மிஸ்ஸிங்.. பிரியங்காவுடன் களமிறிங்கிய CWC பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்களின் ஆதரவு பெற்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கர் இப்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

"என்னடா சொன்னே.." நிரூப் பேசிய கொச்சை வார்த்தை..? கொதித்த ஜூலி.. சிம்புவிடம் fans கோரிக்கை

சூப்பர் சிங்கர் சீசன் 8

விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கின்றது. வெற்றிகரமாக இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பான நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நடுவர்களாக பாடகி சித்ரா மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல திறமையாளர்கள் சினிமாவில் பாடகர்களாக உருவாகி வந்துள்ளனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் விருந்தாளிகள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அதிகம் பிரபலமாக முக்கியக் காரணமாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களும் இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு பல முறை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ் பி சரண் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். மிகப்பிரம்மாண்டமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் பல திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்வது வாடிக்கையான ஒன்று.

தொகுப்பாளர்கள் மாற்றம்

இந்த நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கிய அனைத்து தொகுப்பாளர்களும் தங்கள் நகைச்சுவை திறனால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தவர்கள்தான். தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகின்றனர்.  விஜே பிரியங்கா, சில நாட்களுக்கு முன்பு வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அந்த சீசனில் ரன்னர் அப்-ஆக வந்த பிரியங்கா மீண்டும் விஜய் டிவிக்கு எப்போது வந்து தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்களிடம்  எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது மீண்டும் பிரியங்கா, விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கி விட்டார்.

மா கா பா ஆனந்த் மிஸ்ஸிங்

அதன்படி பிரபல விஜே மா.கா.பா.ஆனந்த்-உடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இப்போது திடீரென ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்கான தொகுப்பாளர்களாக பிரியங்காவும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி புகழ் குரேஷியும் கலந்துகொண்டுள்ளனர். வழக்கமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா கா பா ஆனந்த் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. இந்த சீசனில் இதுபோல வரிசையாக தொகுப்பாளர்களை மாற்றி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அம்மு அபிராமியின் பிறந்தநாள்... செமயான பெர்த் டே ட்ரீட் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

Ma ka anand missing Super singer 8 hosts changed

People looking for online information on சூப்பர் சிங்கர் சீசன் 8, மா.கா.பா, மைனா நந்தினி, Ma ka anand, Super Singer, Super Singer 8, Vijay tv, Vijay Tv shows will find this news story useful.