500 வருட பழமையான முருகன் கோயிலில் பிரபல இயக்குனருடன் நடிகர் சசிக்குமார் சாமி தரிசனம்.. PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் & நடிகர் சசிகுமார், பிரபல இயக்குனர் உடன் முருகன்  கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | முதல் முறை பிரபல சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன்.. கலகல பேச்சு!

2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார்.‌ இந்த சுப்ரமணியபுரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

சசிகுமார், இயக்குனர் பாலாவிடம் சேது படத்திலும், அமீருடன் மௌனம் பேசியதே, ராம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார்.

தற்போது சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், அயோத்தி, நந்தன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.  கடந்தாண்டு பொங்கலுக்கு சசிகுமார் நடிப்பில் "கொம்பு வச்ச சிங்கம்டா", பின்னர் நான் மிருகமாய் மாற, காரி ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'அயோத்தி' திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கி, மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்திலும் சசிகுமார் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சசிகுமார்,  க.பெ. ரணசிங்கம் பட இயக்குனர் விருமாண்டியுடன் 500 ஆண்டுகள் பழமையான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சென்று இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் விருமாண்டி முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.. பிரபல நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

M Sasi Kumar Visit Siruvapuri Murugan Temple with Director Virumandi

People looking for online information on P Virumandi, Sasi Kumar, Siruvapuri Murugan Temple will find this news story useful.