சமீப காலமாகவே இந்திய சினிமாவில் இறப்புகளும், துக்க செய்திகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழம்பெரும் பாடலாசிரியர் யோகேஷ் கவுர் தற்போது மரணமடைந்துள்ளார். இவர் பொதுவாக யோகேஷ் என்றே திரையுலகில் அறியப்பட்டார். இவருக்கு வாய்த்து 77. 1943-ஆம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர். 'ஆனந்த்' என்ற படத்தில் இவர் எழுதிய 'ஜிந்தகி கைஸஹெ பெஹலி' என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் பல வெற்றி பாடல்களை எழுதிய அவருக்கு, புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறும் பொழுது "யோகேஷ்ஜி மரணமடைந்த செய்தி தற்போது தான் எனக்கு தெரியும். மக்களின் மனம் கவர்ந்த பல பாடல்களை அவர் எழுதியுள்ளார். மிகவும் அமைதியான கண்ணியமான மனிதர். எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.