'துணிவு' படத்தில் இணைந்த பிரபல முன்னணி பாடலாசிரியர்.. செம்ம ஹிட் COMBO ஆச்சே இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | 'வாரிசு' படத்தின் அடுத்த பாடல்.. நடன இயக்குநர் ஜானி கொடுத்த அப்டேட்..! 😍

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்நிலையில் துணிவு படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளதாக பாடலாசிரியர் விவேகா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். பட்டத்துக்கு யானை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவலை விவேகா பகிர்ந்துள்ளார். பட்டத்து யானை படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலாசிரியர் விவேகா ஏற்கனவே வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் படங்களில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு வர இதுதான் காரணம்"... சசிகுமாரின் 'காரி' பட இயக்குனர் பேச்சு..

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Viveka written a song for Ajith Kumar Thunivu

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie Update, Viveka will find this news story useful.