”ஷாருக் பாராட்ட காரணம் இவங்கதான்… ஆனா?” … பாடலாசிரியர் விவேக் VIRAL TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலரை சமீபத்தில் பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் அதைப் பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

Lyricist vivek happy about shah rukh khan beast trailer tweet
Advertising
>
Advertising

அசோக் செல்வன் நடித்த புதிய திரைப்படம்.. பிரபல TV சேனலில் ஒளிபரப்பு! எப்போ? எதுல?

Most waiting பீஸ்ட்…

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக விஜய் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அமைந்துள்ளது.இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். அவரது இசையில் ஏற்கனவே வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள், இன்றுவரை ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

பீஸ்ட் டிரைலர் …

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பீஸ்ட் படத்தின் டிரைலர் ரிலீஸாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வைரல் ஹிட்டானது.  இயக்குனர் செல்வராகவனும் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். டிரைலரில் அவரது வாய்ஸ் ஓவரில், காட்சிகள் செல்ல, இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க விஜய் பேசும் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை நிரம்பி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் meaner leaner stronger என்ற பாடல் ஆகியவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஷாருக் கானைக் கவர்ந்த பீஸ்ட் இந்தி டிரைலர் …

பீஸ்ட் தமிழ் டிரைலர் வெளியான சில நாட்களில் இந்தி ரா (பீஸ்ட்) டிரைலர் வெளியானது. அதைப் பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தன்னுடைய ட்வீட்டில், "என்னைப் போல விஜய்யின் தீவிர ரசிகனான அட்லீயுடன் இணைந்து பீஸ்ட் டிரைலர் பார்த்தேன். பீஸ்ட் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.. டிரைலர் ’meaner leaner stronger’ ஆக உள்ளது" என குறிப்பிட்டு டிவீட் செய்திருந்தார்.

பாடலாசிரியரின் மகிழ்ச்சி டிவீட்…

இந்த ட்வீட்டை தற்போது பகிர்ந்துள்ள பீஸ்ட் மோட் பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் ‘எனக்கு நன்றாக தெரியும் ஷாருக் டிவீட் செய்ய காரணம், விஜய், நெல்சன், பீஸ்ட் குழுவினர் மற்றும் அட்லி ஆகியவர்கள்தான் என்று. ஆனாலும் என்னால் என் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லா நாளும் ஷாருக் கான் உங்கள் வரிகளை ட்வீட் செய்யப்போவதில்லை’  என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள பீஸ்ட் மோட் பாடலை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த டிவீட் இப்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

ஆஸ்கர் நாயகனும், ஆர்.பார்த்திபனும் - இரவின் நிழல் இசை விழா .. பாரதிராஜா வேண்டுகோள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist vivek happy about shah rukh khan beast trailer tweet

People looking for online information on Anirudh, Beast, Lyricist Vivek, Nelson Dilipkumar, Shah Rukh Khan, Shah rukh khan beast trailer tweet, Vijay will find this news story useful.