"உனக்கொரு மலர்மாலை நான் வாங்க வேண்டும்.. அது இதற்கா?".. வாணி ஜெயராம் மறைவு.. வைரமுத்து உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமன் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம். மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி ஜெயராமன், தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்களை கேட்கும் போது பலரும் வாணி ஜெயராம் குரலில் சொக்கி போய் விடுவார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

தனது மிகவும் இனிமையான குரல்கள் மூலம் பல பாடல்களை பாடி ஏரளாமான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தவர் வாணி ஜெயராம். சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் மூன்று முறை வென்றிருந்தார் வாணி ஜெயராம். வாணி ஜெயராமுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் காலமானார். இவரது மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ட்வீட்டில், "நீங்கள் எனக்குப் பாடிய
முதல் பாடலையே இறுதி அஞ்சலியாய்ச் செலுத்துகிறேன்.

"மேகமே மேகமே
பால்நிலா தேய்ந்ததே
தேகமே தேயினும்
தேனொளி வீசுதே

உனக்கொரு மலர்மாலை
நான் வாங்க வேண்டும்
அது இதற்கோ?" என வைரமுத்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Vairamuthu Condolences to Singer Vani Jayaram Demise

People looking for online information on Vairamuthu, Vani Jayaram will find this news story useful.