சென்னை: கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படத்தை பார்த்து டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
ஹாலிவுட் இயக்குனர் ஆடம் மெக்கே இயக்கத்தில் லியர்னாடோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் ‘டோன்ட் லுக் அப்’. 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க அபோகாலிப்டிக் பிளாக் காமெடி திரைப்படமாகும். இயக்குனர் ஆடம் மெக்கே எழுதி, தயாரித்துள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ், ராப் மோர்கன், ஜோனா ஹில், மார்க் ரைலான்ஸ், டைலர் பெர்ரி, டிமோதி சாலமேட் சாலமேட் ஆகியோர் நடித்துள்ளனர்.
மனித உலகை அழிக்கும் வால் நட்சத்திரத்தைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்க முயற்சிக்கும் இரண்டு வானியலாளர்களின் கதையை இந்த படம் அரசியல் நய்யாண்டி, காலநிலை மாற்றம், சமகால அமெரிக்க அரசியல் ஆகியவற்றை கலந்து ரசிக்கும் படி சொல்கிறது.
இப்படம் டிசம்பர் 10 அன்று குறைந்த தியேட்டர்களில் வெளியாகிய பின் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரத்தில் 263 மில்லியன் மணி நேரங்கள் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்தது மேலும் நெட்பிளிக்ஸில் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி விமர்சனம் எழுதியுள்ளார். அதில், "விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார். உலகம் நகையாடுகிறது கடைசியில் அது நிகழ்ந்தே விடுகிறது. அழகான ஆங்கிலப் படம் Don't Look Up (மேலே பார்க்காதே)! நீங்கள் மேலே பாருங்கள்" என வைரமுத்து விமர்சனம் எழுதியுள்ளார்.
"மலேசியாவில் 18 வயசுக்கு கீழ 'வலிமை' படத்துக்கு அனுமதி இல்லை" - அறிவிப்பின் பின்னணி என்ன?