மஸ்காரா, மக்காயலா பாடலாசிரியர் பிரியன் இயக்கி நடித்த ‘அரணம்’.. விஜய் ஆண்டனி வெளியிட்ட FIRST LOOK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடலாசிரியர் பிரியன் அரணம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

Advertising
>
Advertising

தமிழில் மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, மனசுக்குள் புது மழை விழுகிறதே (அஞ்சாதே) உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் ப்ரியன். அஞ்சாதே, கோலிசோடா,  விஜய் ஆண்டனி இசையமைத்த பல திரைப்படங்கள், அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத்தலைவன் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் நடித்து இயக்கியுள்ள அரணம் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

ஹாரர், கிரைம், திரில்லர் படமான அரணம் படத்தை தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக வர்ஷா நடிக்க, ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். முரண், சித்திரம் பேசுதடி - 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த சாஜன் மாதவ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை PK கவனித்துக்கொள்ள, கலை இயக்குநராக பழனிவேல்,  சண்டைப்பயிற்சியை Rugger ராம்குமார் பணிபுரிந்துள்ளனர். ராம்சிவா, ஸ்ரீசெல்வி நடனம் அமைத்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள பாடலாசிரியர் பிரியன், தானே கதையை எழுதியதால், அதை நுட்பமாக படமாக்க வேண்டிய தேவை இருந்ததால், தானே படத்தை இயக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நேரிலும் இணையவழியிலும் பலருக்கும் பாடல் எழுத பயிற்றுவிக்கும் தமிழ்த் திரைப்பாக்கூடம் எனும் அமைப்பில் பயிலும் சில மாணவர்களுக்கு இப்படத்தில் நடிக்கவும், முருகானந்தம், பாலா, சஹானா ஆகிய 3 பேருக்கு இப்படத்தில் பாடல்களை எழுதவும் வாய்ப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரியன், அரணம் என்றால் அரண்மனை மற்றும் காப்பது என இரண்டு பொருள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இப்படம் பற்றி இப்படத்தின் இயக்குநரும் நாயகனுமான பிரியன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தொடர்புடைய இணைப்புகள்

Lyricist Piriyan Debut acting and Direcorial Movie Aranam

People looking for online information on Aranam, Priyan, Sajan madhav, Vijay Antony will find this news story useful.