விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை எழுதியுள்ள கு கார்த்திக் பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
”சினேகாவ ஓரமா நின்னு பார்த்த நான், இன்னிக்கு.." – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி
பீஸ்ட் அறிவிப்பும் ரிலீஸூம்
நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் பீஸ்ட் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
முதல் சிங்கிள் அரபிக்குத்து
இந்த படத்தின் முதல் சிங்கிளான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14 அம் தேதி வெளியாகி இன்ஸ்டண்ட் ஹிட் ஆனது. அது மட்டுமில்லாமல் ரிலீஸ் ஆனது முதல் இப்போதுவரை இணையத்தில் அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த பாடலைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 150 மில்லியனைக் கடந்துள்ளது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் இந்த பாடலுக்கு தங்கள் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்ம பார்ட்டி சாங் ஆன் தி வே…
அரபிக்குத்துக்குப் பிறகு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா பாடலை 19.03.2022 அன்று வெளியிட உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக நேற்று 30 செகண்ட் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். விஜய் பாடியுள்ள இந்த பாடலை கு கார்த்திக் எழுதியுள்ளார்.
இந்த பாடலின் ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இடம்பெற்றுள்ளனர். வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் துள்ளலிசை பாடல்களாகவே இருக்கும். அதை உறுதி செய்வது போலவே நேற்று வெளியாகியுள்ள 30 செகண்ட் ப்ரோமோவே இந்த பாடல் ஒரு செம்மயான பார்ட்டி சாங்காக இருக்கபோவதை அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள ‘ரா மம்மா ஹே ராமம்மா ஜாலியா ஜிம்கானா ராசம்மா ஹே ராசம்மா சொல்றது சர்தானா’ என்ற வரிகள் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்துள்ளன.
நெல்சன் சொன்ன situation
இந்நிலையில் இந்த பாடலை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் கு கார்த்திக் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் பாடலைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். நேர்காணலில் ‘இந்த பாடலுக்காக என்னைக் கூப்பிட்ட அனிருத்தும் நெல்சனும், பாடலுக்கான சூழலாக ‘எந்தவொரு கஷ்டமான பிரச்சனை வந்தாலும் அதைப் பத்திக் கவலைப்படாமல் தாண்டி செல்ல வேண்டும். எந்த பிரச்சனையையும் ஹேண்டில் பண்ணி அடுத்த கட்டத்துக்கு போகலாம்..’ என்பதை எளிமையாக சொல்லவேண்டும் எனக் கூறினர். நெல்சனோடு பணிபுரிவது மிகவும் எளிமையானது மற்றும் இனிமயானது.’ எனக் கூறியுள்ளார்.
ப்பா… என்னா ஸ்டைலு!- ரசிகர்களக் கவர்ந்த நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்