நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' வெளியாகி, இன்று வரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பிளேலிஸ்டில் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
இந்த பாடலின் துள்ளலில் இருந்து ரசிகர்கள் இன்னும் வெளியே வராத நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த ப்ரோமோ ஒன்றை படக்குழு நேற்று சர்ப்ரைஸாக வெளியிட்டிருந்தது.
'ஜாலியோ ஜிம்கானா'
அனிருத் இசையில், விஜய் பாடியுள்ள பாடலுக்கு 'ஜாலியோ ஜிம்கானா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே, VTV கணேஷ் உள்ளிட்டோர், இந்த ப்ரோமோ வீடியோவில் தோன்ற, விஜய்யின் வாய்ஸ் தான், பெரிதாக ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த பாடலை, கு. கார்த்திக் எழுதியுள்ளார்.
பாடலாசிரியர் விளக்கம்
மார்ச் 19 ஆம் தேதி முழு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜாலியோ ஜிம்கானா என்ற வார்த்தையை தான், ஒட்டுமொத்த ரசிகர்களும் நேற்றில் இருந்து முணுமுணுத்து வருகின்றனர். இந்நிலையில், பாடலாசிரியர் கு. கார்த்திக், 'ஜாலியோ ஜிம்கானா' என்ற வார்த்தையின் அர்த்தம் குறித்து, 'Behindwoods' சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மிகப்பெரிய சர்ப்ரைஸ்
"இந்த பாடல் பற்றி, நெல்சன் என்னிடம் பேசும் போது, கவலை அனைத்தையும் மறந்து முழுக்க முழுக்க ஜாலியாக இருக்கும் ஒரு பாடல் வேண்டும் என கேட்டார். அதற்கேற்ப சில வார்த்தைகளை நாங்கள் யோசித்தோம். மேலும், விஜய் சார் பாடப் போகிறார் என்பது, மிகப்பெரிய சர்ப்ரைஸாக எனக்கு இருந்தது. அவர் பாடுவதால், நடு நடுவே அவருக்கேற்ற வார்த்தைகளையும் நாங்கள் இணைத்திருந்தோம்" என்றார்.
அர்த்தம் இது தான்
தொடர்ந்து, ஜாலியோ ஜிம்கானா அர்த்தம் பற்றி பேசிய கு. கார்த்திக், "ஜாலியோ ஜிம்கானா என்றால், என்ன நடந்தாலும் அதை பற்றிக் கவலைப்படாமல், ஜாலியா சிரிச்சிக்கிட்டே இருக்கணும் என்பது தான். என்ன பிரச்சனை நடந்தாலும் அதை பற்றியே யோசித்துக் கொண்டே இருக்காமல், கடந்து செல்ல வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இது பற்றிய முழு வீடியோவைக் காண :