சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை… ஆர் ஆர் ஆர் படத்துக்காக செய்த உதவி- நன்றி தெரிவித்த லைகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தன்னுடைய டான் படத்தின் ரிலிஸ் தேதியை மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளதால் ஆர் ஆர் ஆர் படம் அறிவித்த தேதியில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Lyca thanked sivkarthikeyan for don release postpone
Advertising
>
Advertising


லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மே 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலமுறை டான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றிவைக்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை மே 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


டான் படத்தின் ரிலிஸ் தேதி மாற்றம்:

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டான் திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு படத்தின் ப்ரமோஷன் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.


ஆனால் அதே நாளில் ராஜமௌலி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர்களை கதாநாயகர்களாக வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள ஆர் ஆர் ஆர் படமும் தங்கள் ரிலீஸ்  தேதியை அறிவித்தது. பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி படங்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை லைகா நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது.


சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை:


இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்துக்காக சிவகார்த்திகேயன் தன்னுடைய டான் படத்தின் ரிலீஸ் தேதியை கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளார். ஒரு நடிகராக தயாரிப்பாளராக சிவகார்த்திகேயனின் இந்த முடிவு பெருந்தன்மை வாய்ந்தது. இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதில் ‘சிவகார்த்திகேயனின் பெருந்தன்மையான செயலுக்கு நன்றி. மார்ச் 25 ஆம் தேதி திட்டமிட்டிருந்த தன்னுடைய பட ரிலீஸை தள்ளிவைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இரண்டு படங்களுமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற படங்கள்.  ரசிகர்களே டான் படத்தின் ரிலீஸ் தேதியை மே 13 ஆம் தேதிக்கு மாற்றுகிறோம். நீங்கள் எப்போதும் எங்கள் மீது பொழியும் அன்பையும் ஆதரவையும் கொடுப்பீர்கள் என நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளது.

Tags : Don, RRR, Rajamouli

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lyca thanked sivkarthikeyan for don release postpone

People looking for online information on Don, Rajamouli, RRR will find this news story useful.