பிரம்மாண்ட வரவேற்பு பெற்ற 'பொன்னியின் செல்வன் 1'.. இயக்குனர் மணிரத்னத்துக்கு செம SURPRISE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", நேற்று (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பல ஆண்டு காலமாக, பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏராளமான திரை பிரபலங்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் இந்த கனவு, இயக்குனர் மணிரத்னத்தால் தற்போது நிறைவேறவும் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுக்க பிரம்மாண்டமான வரவேற்பும் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 1 படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப் படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி ஆகியோர் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்துள்ளனர்.

தொடர்ந்து, பூங்கொத்து கொடுத்து படம் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். Madras Talkies Executive Producer திரு. சிவா ஆனந்த் இந்த நிகழ்வின் போது உடனிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Lyca and red giant movies wishes maniratnam for ps 1 success

People looking for online information on Lyca Productions, Mani Ratnam, Ponniyin Selvan 1, Red Giant Movies will find this news story useful.