தமிழில் சமீபத்தில் வெளியாகி இருந்த வெப் சீரியஸ் தொடர் 'அயலி'. முத்து குமார் இயக்கி இருந்த இந்த தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம், பெண்களின் கல்விக்கான முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த வெப் சீரியஸ் தொடர் அமைந்திருந்தது தான். தமிழில் வெளியான சிறந்த தொடர் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners
அயலி தொடரில், அபி நக்ஷத்ரா, அனுமோள், மதன், லிங்கா சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். Estrella Stories தயாரிப்பு நிறுவனம் சார்பாக, குஷ்மவதி இந்த தொடரை தயாரித்துள்ளார். மேலும் இந்த தொடரின் திரைக்கதை மற்றும் வசனத்தை வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமார் ஆகியோர் எழுதி உள்ளனர். ரேவா இசையமைத்த இந்த தொடர், Zee 5 தளத்தில் வெளியாகி இருந்தது.
அயலி தொடரில் வரும் வசனங்களும், தொடரை சுற்றி வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதிகம் பாராட்டுக்களை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, முதன்மை கதாபாத்திரத்தில் வரும் அபி நக்ஷத்ராவின் தோழியாக வரும் லவ்லின் சந்திரசேகர் நடிப்பும் பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கவும் செய்துள்ளது. இதற்கு முன்பு ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ள லவ்லினுக்கு அயலி தொடர் ஒரு சிறந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners
இந்த நிலையில், இவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் என்பது ஏராளமானோருக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த தில்லு முல்லு திரைப்படத்தில் அவருக்கு சகோதரி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதிக கவனம் பெற்றவர் விஜி சந்திரசேகர். ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள விஜி, சமீபத்தில் எதற்கும் துணிந்தவன், அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அவரது மகள் லவ்லின் தான் தற்போது அயலி தொடர் மூலம் தனது நடிப்பால் அதிக பாராட்டுக்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நடிகை விஜி சந்திரசேகர் மற்றும் அவரது மகளும் நடிகையுமான லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இதில், நிறைய சுவாரஸ்யமான தகவல்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.