கோமாளி பட இயக்குனரின் 'லவ் டுடே'.. டைட்டில் கார்டில் தளபதி விஜயை கௌரவித்த படக்குழு..😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று வெளியான 'லவ் டுடே' படத்தில் நடிகர் விஜய் பெயர் படத்தின் டைட்டிலில் இடம் பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிக்கன் பிரியாணி & புரோட்டா.. எந்திரன் வசனத்துடன் அதிதி ஷங்கர் பகிர்ந்த செம வீடியோ!

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.  காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்த படம் வெளியாகி உள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார்.

கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று (நவம்பர் 4, 2022) இப்படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான இந்த படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் விஜய்க்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் நடிகர், இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டார்.  அப்போது பேசிய பிரதீப் ரங்கநாதன், "படத்தின் பெயர் 'லவ் டுடே' என்பதால் ஏதேனும் அனுமதி வாங்க வேண்டி இருந்ததா?" என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக கேட்கனும்ல R.B சௌத்ரி சார்ட்ட ரைட்ஸ் இருந்தது. இருப்பினும் விஜய் சாரிடமும் கேட்கப்பட்டது. ஏ ஜி எஸ் ஏற்கனவே பிகில் படம் தயாரித்து இருந்ததால் விஜய் சாரை அனுகுவது எளிதாக இருந்தது. விஜய் சாருக்கு குறும் படத்தை அனுப்பி இந்த கதையை தான் லவ் டுடே என எடுக்கப்போகிறோம் என கூறி அனுமதி வாங்கினோம்" என இயக்குனர் பிரதீப் கூறியிருந்தார்.

மேலும் இந்த லவ் டுடே படத்தின் டிரெய்லரிலும் நடிகர் விஜய்க்கு நன்றி கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தில் நடிகர் விஜய், சுவலெட்சுமி, ரகுவரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Thunivu : 'துணிவு' அடுத்த கட்ட பணியில் நடிகர் அஜித்.. மஞ்சு வாரியர் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Team Special Thanks Title Card to Vijay

People looking for online information on Love today, Love Today Team, Title Card, Vijay will find this news story useful.