"பழைய யுவன் வேணும்".. லவ் டுடே படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ.. யுவனின் நச் காமெடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'

Advertising
>
Advertising

Also Read | அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல்.. இது திருச்சிற்றம்பலம் ஸ்பெஷல்!

இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது. கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் லவ் டுடே படத்தை AGS நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் பாடலான 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குனர் பிரதீப் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர். "பழைய யுவன் வேணும்" என்று பிரதீப் கேட்க, உடனே தனது பழைய சிறு வயது போட்டோவை யுவன் கொடுப்பது போன்ற செமயான நகைச்சுவைகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

கடைசியாக AGS நிறுவனம் 2019 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் வகைமையில் வெளியான பிகில் படத்தை தயாரித்தது. இந்த  படத்தில் நயன்தாரா, அமிர்த ஐயர், வர்ஷா பொல்லம்மா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Also Read | இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த ரசிகர்.. Unseen போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

"பழைய யுவன் வேணும்".. லவ் டுடே படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வீடியோ.. யுவனின் நச் காமெடி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Movie Yuvan Shankar Raja Saachitale Single Promo Video

People looking for online information on Love Today Movie, Yuvan Shankar Raja, Yuvan Shankar Raja Saachitale Single will find this news story useful.