தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். எனினும் அவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இருவரும் அழகாக உடை அணிந்து டிவிட்டரில் ரம்ஜான் வாழ்த்து பதிவு வெளியிட்டிருந்தனர். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் 'எப்படியோ ஒருவழியாக மதம் மாற்றிவிட்டார். இதற்குப் பெயர்தான் லவ் ஜிகாத்" என்று மோசமாக பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த மணிமேகலை "ஹாப்பி ரம்ஜான் சொல்றதுக்கெல்லாம் மதம் மாறி விட்டுதான் சொல்லனுமா. யாரும் இங்கு கன்வெர்ட் ஆகவில்லை. என்னுடன் அவர் கோயிலுக்கு வருகிறார். நாங்கள் இருவரும் ரம்ஜான் கொண்டாடுகிறோம். நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். உங்களது தேவையில்லாத குழப்பங்களை இங்கே கொண்டு வர வேண்டாம். நன்றி" என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார். மணிமேகலையின் இந்த தரமான பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.