‘மனதை கொள்ளைக் கொள்ளும் லொஸ்லியா’ - பிக் பாஸில் அடிக்கும் ஹரிஷ் கல்யாணின் கண்ணம்மா FEVER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 15 போட்டியாளர் முதல் நாளில் கலந்துக் கொண்ட நிலையில் மறுநாள் மற்றொரு போட்டியாளராக மீரா மிதுன் என்ற மாடல் கலந்துக் கொண்டார்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல நடிகர் நடிகைகள் போட்டியாளராக பங்குபெற்றாலும். ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாக்கி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எபிசோட் ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் நடித்த பாடல் ஒன்றை லொஸ்லியா பாடினார்.

இதனை பார்த்த ஹரிஷ் கல்யாண் ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் வரும் கண்ணம்மா பாடலை லொஸ்லியா பாடியதை ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து ரசிகர்கள் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹரிஷ் கல்யாண், ‘லொஸ்லியா இதயங்களை கொள்ளைக் கொள்கிறார். பிக் பாஸ் வீட்டில் கண்ணம்மா பாடல் கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது’ என ட்வீட் செய்துள்ளார்.

Losliya winning hearts - Harish Kalyan's Kannamma song in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 3, Harish Kalyan, Ispade Rajavum Idhaya Raniyum, Kannamma, Losliya will find this news story useful.