விழுந்து வாரிய லாஸ்லியா, ஷெரின் - பிக் பாஸ் வீட்டில் சூடுப்பிடிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 86 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலம் போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், விவாதம், நட்பு, காதல், மோதல் என ஆரம்பத்தில் இருந்து எமோஷனலாகவே நாட்கள் நகர்ந்த நிலையில், இறுதிக்கட்டம் நெருங்கியிருக்கும் வேளையில், ஃபிசிக்கல் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிக்கெட் டூ ஃபினாலே என்ற டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் இந்த வாரம் கொடுத்திருக்கிறார். இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் ஃபிசிக்கல் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடுபவர் நேரடியாக பிக் பாஸின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார்.

ஆகையால், இந்த டாஸ்கில் எந்த ஒரு விட்டுக் கொடுத்தலும் இன்றி போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோவில், முதுகில் கோணிப்பை ஒன்றில் தெர்மாகோலை சுமந்துக் கொண்டு வட்டத்திற்குள் ஓடி, கோணிப்பையில் உள்ள தெர்மாகோலை வெளியேற்ற வேண்டும்.

இந்த டாஸ்கை முடிக்க போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓடி வந்து தெர்மாகோலை வெளியேற்றி வர, பாதியில் லாஸ்லியா திருகி கீழே விழ, புரொமோவின் இறுதியில் ஷெரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனால், இன்றைய நிகழ்ச்சி போட்டி வேகத்தில் போட்டியாளர்கள் வெறித்தனம் காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்லும் போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

விழுந்து வாரிய லாஸ்லியா, ஷெரின் - பிக் பாஸ் வீட்டில் சூடுப்பிடிக்கும் டிக்கெட் டூ ஃபினாலே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Losliya Sherin Ticket To Finale Bigg Boss Tamil 3 Promo 1

People looking for online information on Bigg Boss Tamil 3, Losliya, Sherin, Ticket To Finale will find this news story useful.