பாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா ஆடிய கியூட் நடனம்... எவ்ளோ அழகா இருக்காங்கப்பா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது செயல்களால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் முதல் படமாக லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங் உடன் 'ப்ரண்ட்ஷிப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சதீஷ் போன்ற பலரும் நடிக்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக ஆரியுடன் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

'ப்ரண்ட்ஷிப்'  படத்தை சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்குகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் வேஷ்டி சட்டை அணிந்த ஹர்பஜனுடன் சேர்ந்து லாஸ்லியா, சதீஷ், குக் வித் கோமாளி பாலா ஆடும் புகைப்படங்கள் இன்று ட்ரெண்ட் ஆகி வருகின்றன. அதிலும் பாவாடை தாவணியில் மிகவும் கியூட்டாக லாஸ்லியா ஆடும் சிறிய நடன வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் லாஸ்லியாவின் இந்த அழகான பதிவை பலரும் லைக் செய்து வருவதினால் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாவாடை தாவணியில் பிக்பாஸ் லாஸ்லியா ஆடிய கியூட் நடனம்... எவ்ளோ அழகா இருக்காங்கப்பா..! வீடியோ

Tags : Losliya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Losliya new cute dance video லாஸ்லியா ஆடிய கியூட் நடனம்

People looking for online information on Losliya will find this news story useful.