லாஸ்லியா உடன் நடிக்கும் WE ARE THE BOYS பிரபலம்... அதுவும் அந்த ஹிட்டடித்த மலையாள ரீமேக் படத்தில்....!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. எனினும் இன்றைக்கும் பலரது பேவரைட்டாக இருப்பது பிக் பாஸ் 3 சீசன் தான். We are the Boys என்று அழைக்கப்பட்ட கவின், முகேன், சாண்டி, தர்ஷன் மற்றும் லாஸ்லியா அடங்கிய அந்த சிறிய குழு மக்களை வேற லெவலில் என்டெர்டெயின் செய்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர்களில் பலருக்கும் திரைத்துறையில் புதிய வாய்ப்புகள் தேடி வருகிறது. அந்த வகையில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமிழில் 'கூகுள் குட்டப்பன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இணை இயக்குனர்களான சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்க இருக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை தற்போது விமர்சையாக நடைபெற்று உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Losliya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Losliya in famous malayalam remake லாஸ்லியா நடிக்கும் மலையாள ரீமேக் படம்

People looking for online information on Losliya will find this news story useful.