மாஸ்டர் BREAKING : விஜய் பெயர் ஜேம்ஸ் துரைராஜ்... அப்போ விஜய் சேதுபதி பெயர்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் பெயர் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

பிகில் படத்தை அடுத்து விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குநராக லோகேஷ் கனகராஜை டிக் அடித்தார். மாஸ்டர் என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதற்கிடையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. மேலும் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இருக்கும் படத்தின் போஸ்டரும் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் 'பவானி' என சொல்லப்படுகிறது.  மாஸ்டரில் விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என கூறப்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் பெயர் 'பவானி' என சொல்லப்படுகிறது.

அப்போ மாஸ்டரில் பவானியின் முழு ரவுடித்தனத்தை எதிர்ப்பார்க்கலாம் !

Lokesh kanagaraj, vijay's master vijay sethupathi name

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.