விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. படத்துல HERO-வோடா ROLE இதுவா.? EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

Lokesh Kanagaraj Vijay Thalapathy 66 Movie Genre Update
Advertising
>
Advertising

Also Read | பிரபல TV சீரியலில் சத்யராஜ், R.J.பாலாஜி, ஊர்வசி சிறப்பு Entry.. வெளியான Exciting தகவல்

நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார்.

பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Beast படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத் & சென்னையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த 67 வது படத்தின் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை பகிர்ந்து உள்ளார்.

அதில் தளபதி 67 படம் கேங்க்ஸ்டர் கதையை உருவாக உள்ளதாக அறிவித்துள்ளார். மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கிய குட்பெல்லாஸ் படத்துடன் ரசிகர் ஒருவர் ஒப்பிடும்போது, "குட் பெல்லாஸ் பெரிய கேங்ஸ்டர் படம் என்றும் அதனுடன் ஒப்பிட்டு விட முடியாது என்றும்" லோகேஷ் கூறி உள்ளார்.

Also Read | "First இங்க தான் Meet பண்ணோம்".. மனைவி நயன்தாராவுடன் புதுமாப்பிள்ளை விக்னேஷ் சிவன் Press meet.. வீடியோ

விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67.. படத்துல HERO-வோடா ROLE இதுவா.? EXCLUSIVE வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Vijay Thalapathy 66 Movie Genre Update

People looking for online information on Lokesh Kanagaraj, Lokesh Kanagaraj Next Movie, Thalapathy 66 Movie, Thalapathy Vijay will find this news story useful.