கைதில செத்த ஆளு.. விக்ரம் படத்துல எப்படி வந்தாரு? ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன லோகேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Advertising
>
Advertising

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.

இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு TVS அப்பாச்சி மோட்டார் பைக்குகளையும் பரிசளித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான கமல், விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை அவரது வீட்டிற்கே சென்று பரிசாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். டிவிட்டர் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு ப்ரோமோட் செய்யப்பட்டது. இதில் ரசிகர் ஒருவர், "கைதியில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் எப்படி விக்ரம் படத்தில் உயிருடன் வந்தது ?  இதை நம்ப முடியவில்லை" என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த லோகேஷ், "கைதியில் நெப்போலியனால் அன்புவின் தாடை மட்டும் உடைந்தது, அதனால் விக்ரமில் அந்த இடத்தில் தையல் குறி இருக்கும்.. இது குறித்து கைதி2ல் மேலும் விளக்கப்படும்" என லோகேஷ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Twitter Live Session about Vikram

People looking for online information on கைதி, Kaithi, Kamal Haasan, Karthi, Lokesh Kanagaraj, Suriya, Vikram will find this news story useful.