"அடுத்து இந்த நடிகரோட எப்போ படம் பண்ண போறிங்க?" கேள்விக்கு 'செம்ம' பதில் சொன்ன லோகேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காதல் வகைமையில் படத்தை இயக்குவது குறித்து டிவீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பத்திக்கிச்சி பாட்டு இடம்பெற்றது. இந்த பாடல் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் பாடலாகும். இந்த பாடலை ஆதித்தன் இசையமைத்திருந்தார். இந்த அசுரன் படத்தில் மன்சூர் அலிகான் கேரக்டர் பெயர் வீரபத்திரன். இந்த வீரபத்திரன் கேரக்டர் கேப்டன் பிரபாகரன் படத்தின் வீரபத்திரன் கேரக்டரின் Spin off ஆகும்.

விக்ரம் படமும் 1987ல் வெளியான விக்ரம் படத்தின் Spin off ஆக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்திற்காக வத்திக்குச்சி பத்திக்கிச்சி பாட்டு Tribute ஆக விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். டிவிட்டர் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்வு ப்ரோமோட் செய்யப்பட்டது. இதில் ரசிகர் ஒருவர், "மன்சூர் அலிகான் சாரை உங்க படத்துல பாக்கலாமா?" என கேள்வி எழுப்பினார். அதற்கு லோகேஷ் கனகராஜ், "விரைவில்" என பதில் அளித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj tweet about film with mansoor ali khan

People looking for online information on Kaithi, Lokesh Kanagaraj, Mansoor Alikhan, Vikram will find this news story useful.