மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
Also Read | ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. நாதஸ்வரம் தவில் இசைக்க.. அவரே வெளியிட்ட வீடியோ!
இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படமும் ஹிட்டாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், நேற்று தமது 37 வது பிறந்தநாளை கொண்டாடினார். இச்சூழலில் டிவிட்டரில் ஒரு நெட்டிசன், லோகேஷ் கனகராஜ் ட்வீட்டுக்கு கீழ், "Overrated லோகி" என ட்வீட் செய்ய, இந்த ட்வீட்டை லோகேஷ் கனகராஜ் லைக் செய்து பதிலடி கெடுத்து இருந்தார். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் வைரலாக பரவி வருகிறது. தற்போது அந்த லைக்கை லோகேஷ் கனகராஜ் எடுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | கோலார் தங்க சுரங்கத்தில் பா. ரஞ்சித்.. மாளவிகா பகிர்ந்த 'தங்கலான்' படத்தின் BTS புகைப்படங்கள்!