விக்ரம் படத்துக்காக கமல்ஹாசன் work out செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
Also Read | விலங்கு-க்குப் பின் விமலின் அடுத்த படம்… Title-உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்.!
விக்ரம் வெற்றி
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
வசூல் வேட்டை
உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் விக்ரம் இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறத். கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல் விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசும் போது சூசகமாக 300 கோடி ரூபாய் என பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதால் வசூல் 400 கோடி ரூபாயை நெருங்கும் என சொல்லப்படுகிறது.
கமல் workout
இந்நிலையில் முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 25 ஆவது நாளன்று படத்துக்காக கமல்ஹாசன் Workout செய்த வீடியோவை வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதன் படி தற்போது அந்த வீடியோவின் Glimpse ஐ நேற்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் முழு வீடியோ இன்று வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | கடற்கரையில் கணவர் நிக் ஜோன்ஸ் உடன் பிரியங்கா சோப்ரா.. இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த UNSEEN PHOTOS