மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.
Also Read | "இது தமிழ் சினிமாவின் பொற்காலம்".. லவ் டுடே, விக்ரம் படங்கள் குறித்து பேசிய சிம்பு!
இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 03 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் தான் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் வரண்னையாளராக நடிகர் ஆர்.ஜே. பாலாஜியுடன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தளபதி 67 படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது.
போட்டி துவங்கும் முன் மீடியா சென்டரில் "தளபதி 67 அப்டேட் மட்டும் சொல்லுங்க".. என தொகுப்பாளர் முத்து கேட்க, "அது மட்டும் கேட்காதீங்க. அதை தவிர எல்லாமே என்கிட்ட கேளுங்க" என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்தார். பின்னர் வர்ணனை முடித்து கிளம்பும் போது "விரைவில் தளபதி 67 அப்டேட் வரும்" என லோகேஷ் கனகராஜ் கூறிச் சென்றார்.
Also Read | வித்தியாசமான லுக்கில் RJ பாலாஜி.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 1st லுக் போஸ்டர்! முழு விவரம்