மாநகரம் திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி இருந்த லோகேஷ், தற்போது நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதில், கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாள் முதல், கமல், சேதுபதி, பகத் ஆகிய மூன்று பேரின் காட்சிகள் படத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.
படு பிசியில் விக்ரம் படக்குழு
இதனைத் தொடர்ந்து, படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் என அனைத்தும், விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேறொரு லெவலுக்கு கொண்டு சென்றது. அதே போல, விஸ்வரூபம் 2 படம் ரிலீசாகி சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து கமல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்களின் ஆவலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது போக, படத்தின் ப்ரொமோஷன் வேலைகளும் கடந்த சில நாட்களாக படு தீவிரமாக விக்ரம் படக்குழுவினரால் நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த ட்வீட்
அதே போல, பகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இதனிடையே, விக்ரம் திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பின்னாடி இருந்த டைட்டில் கார்டு
அனிருத் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், "Locked & Loaded 🔥 #VikramFromJune3" என கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் பின்னணி இசை பணிகள் முடிவடைந்து விட்டதையடுத்து, இது தொடர்பான புகைப்படங்களை லோகேஷ் பகிர்ந்துள்ளார். மேலும், லோகேஷ் மற்றும் அனிருத் இருக்கும் புகைப்படத்தில், பின்னால் கமல்ஹாசன் பெயர் திரையில் டைட்டில் கார்டில் தோன்றும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்தும், ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்தடுத்து, விக்ரம் படக்குழுவிடம் இருந்து, அப்டேட்டுகள் வெளி வந்த வண்ணம் இருப்பதால், ரசிகர்களும் ரிலீஸை எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.