ஒளிப்பதிவாளர் வீட்டு விசேஷத்தில் லோகேஷ் கனகராஜ் & அதிதி ஷங்கர்‌.! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் லோகேஷ் கனகராஜ்.

Advertising
>
Advertising

Also Read | அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா-2.. படத்தில் இணைந்த பிரபல முன்னணி தமிழ் சினிமா TECHNICIAN!

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், அவரை சிறந்த இளம் இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' பிளாக்பாஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 03 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் தான் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் வேற லெவலில் எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய இயக்குனர் லோகேஷின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட்டை தான் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் இணைவது உறுதியான நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் தான் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் செல்வராஜ் மகன் யாத்விக் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஒளிப்பதிவாளர் செல்வக்குமார், மாநகரம், மெகந்தி சர்க்கஸ், ஜிப்ஸி, தாராளபிரபு, விருமன் ஆகிய படங்களில் பணிபுரிந்தவர் ஆவார். நடிகை அதிதி ஷங்கரும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

Also Read | Bigg Boss 6 Tamil: "ஆட்சியை கையில எடுத்துட்ட நீ".. "தலைவர் பதவியே வேணாம்".. அலறிய G.P. முத்து..!

ஒளிப்பதிவாளர் வீட்டு விசேஷத்தில் லோகேஷ் கனகராஜ் & அதிதி ஷங்கர்‌.! வைரல் போட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Attend Selvakumar DOP Son Birthday Party

People looking for online information on Aditi Shankar, Birthday Party, Lokesh Kanagaraj, Selvakumar will find this news story useful.