ராமேஸ்வரம் சென்ற லோகேஷ் கனகராஜ்.. 'விக்ரம்' படக்குழுவுடன் சாமி தரிசனம்! சூப்பர் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இது லிஸ்ட்லயே இல்லயே.. 'அகண்டா' பட இயக்குனரின் அடுத்த ஹீரோ இவரா? போட்டோவுடன் வெளியான அப்டேட்..

இந்தப் படத்திற்கு  ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.விக்ரம் படத்தின் சண்டைக்காட்சியில் பாண்டம் (Phantom) கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாண்டம் கேமரா புரட்சிகரமான அதிவேக கேமரா ஆகும், இதில் FPS (வினாடிக்கு பிரேம்கள்) 1000 இலிருந்து தொடங்கி சராசரியாக 76000 FPS வரை படங்களை படம் பிடிக்க முடியும்.

  கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது.

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது இயக்குனர் குழு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இது குறித்து வசன கர்த்தா ரத்ன குமார் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் "ஆண்டவர் தரிசனத்திற்கு முன் ராமேஸ்வரம் தரிசனம்" என்று கூறியுள்ளார்.

Also Read | S.J சூர்யா - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய Romantic Thriller படம்.. வெளியான மிரட்டல் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj and Vikram Team visited Rameshwaram Temple

People looking for online information on Lokesh Kanagaraj, Vikram Movie, Vikram Movie Team, Vikram Movie Team visit Rameshwaram Temple will find this news story useful.