கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.
Also Read | கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினி? வைரலாகும் லோகேஷ் பேட்டி
இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Beast படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த 67 வது படத்தின் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பல நிகழ்ச்சிகளில் சில தகவல்களை அறிவித்துள்ளார். தளபதி 67 படம் கேங்க்ஸ்டர் கதையை உருவாக உள்ளதாக நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் விஜய்யுடன் இணையும் புதிய படம் குறித்த கேள்விக்கு "தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அறிவிப்பு வந்த பின்னர் அது குறித்து பேசுவதாகவும்" லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
Also Read | கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினி? வைரலாகும் லோகேஷ் பேட்டி