துணிவு சில்லா சில்லா பாட்டு எப்படி இருக்கு? செம்ம பதில் அளித்த லோகேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இதுவரை காணாத லுக்கில் ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. 'பதான்' படத்தின் முதல் சிங்கிள் வீடியோ!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.



துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா மூன்று நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.3 மில்லியன் லைக்குகளுடன் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த பாடல் லிரிக் வீடியோவில் நடிகர் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர், சிபி சந்திரன், பாவனி, ஆமிர் ஆகியோர் தோன்றியுள்ளனர்.

இந்நிலையில் லத்தி படத்தின் விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம்  துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. "துணிவு பாட்டு கேட்டீங்களா? தலயோட பாட்டு எப்படி இருந்தது? " என்ற கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "ரொம்ப சூப்பரா இருந்தது,  ரொம்ப பிடிச்சிருந்தது" என பதில் அளித்துள்ளார்.

Also Read | Rajinikanth: பேர பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about Thunivu Chilla Chilla Song

People looking for online information on Ajith Kumar, Lokesh Kanagaraj, Thunivu, Thunivu Chilla Chilla Song will find this news story useful.