கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.
இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.
Beast படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் 'வாரிசு' படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். "வாரிசு திரைப்படம் இப்போது ரிலீஸாகிவிட்டது. இன்னும் ஒரு பத்து நாட்களில் தளபதி 67 அப்டேட்டை எதிர்பார்க்கலாம். தொடர்ந்து இனி தளபதி 67 படத்தின் அப்டேட்கள் வெளியாகும்" என லோகேஷ் கனகராஜ் கூறினார்.