"இந்த 5 தமிழ் படங்களை வச்சு ஒரு CINEMATIC UNIVERSE".. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம்ம பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸானது.

Advertising
>
Advertising

Also Read | Pathaan : செம டான்ஸ் ஆடிய ஷாருக்கான் & தீபிகா படுகோனே.. வெளியான 'பதான்' படத்தின் 2-வது பாடல் வீடியோ!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.  அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது. தற்போது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்து உள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

இந்த படத்தின் ஓடிடி மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளிக்கு விக்ரம் திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

ராஜ் கமல் நிறுவனம் விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.  விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கடந்த நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நரேன், லோகேஷ் கனகராஜ் பேசும் வீடியோ காட்சிகள் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்யேகமாக வெளியாகி உள்ளன.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசினார். மேலும் ரசிகர்கள் & படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொகுப்பாளர், "கமல் சார் நடித்த படங்களில் இருந்து ஒரு ஐந்து கதாபாத்திரங்களை வைத்து ஒரு யுனிவர்ஸ் உருவாக்க வேண்டும் என்றால் எந்த ஐந்து படங்களின் கேரக்டர்களை சொல்வீங்க?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "நிறைய சொல்லலாம். முதல்ல சத்யா படத்தில் வரும் சத்யா, விருமாண்டி, "மைக்கேல் மதன காமராஜன்" படத்தில் வரும் மைக்கேல், தசாவதாரம் படத்தில் வரும் பிளெட்சர், ஆளவந்தான் படத்தில் வரும் நந்து" என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்தார்.

Also Read | அனிருத் உடன் தமன்.. வைரல் PHOTO-வோட தமன் போட்ட அந்த 2 ஹேஸ்டேக்ஸ் தான் இப்போ டிரெண்டிங்!

"இந்த 5 தமிழ் படங்களை வச்சு ஒரு CINEMATIC UNIVERSE".. லோகேஷ் கனகராஜ் சொன்ன செம்ம பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj about New Cinematic Universe with Kamal Movies

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj will find this news story useful.