மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.
Also Read | அடடே..கார்த்தி நடிக்கும் 'விருமன்'.. கேரளா ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்!
அடுத்ததாக கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, விஜய்யை வைத்து 'மாஸ்டர்' திரைப்படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.
'விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீசானது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது.
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்தார்.
விக்ரம் திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதில் "நடிகர் அஜித்க்கு ஸ்கிரிப்ட் இருக்கா? அவரோடு திரைப்படம் இயக்குவீர்களா?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "கண்டிப்பா அஜித் சார் கூட வேலை செய்யனும்னு ஆசை இருக்கு. காலம் & கதை எல்லாம் தான் இதை முடிவு பண்ணும். அவரோட லைன் அப், நம்மளோட லைன்- அப்.. அப்பறம் அவர் நம்மள கூப்ட்றதுனு எல்லாம் இருக்கு. எனக்கு எல்லார் கூடவும் வேலை செய்யனும்" என கூறியுள்ளார்.
Also Read | ஒரு நாள் முன்கூட்டி ஆகஸ்ட் 11 அன்றே அமெரிக்காவில் ரிலீஸாகும் 'விருமன்'.. வெளியான OFFICIAL தகவல்!