1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விக்ரம்.
இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், சத்யராஜ் அம்ஜத்கான், அம்பிகா, டிம்பிள் கபாடியா, லிசி, சாருஹாசன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அண்மையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றியை ரசிகர்களிடத்தில் பெற்றது. இதனை அடுத்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படத்திற்கு விக்ரம் என்று மீண்டும் பெயரிடப்பட்டிருக்கிறது=.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் கமலின் 232வது திரைப்படம் என்கிற நிலையில் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜ் இது பற்றி கூறியபோது கடந்த இரண்டு மாதங்களாக இந்த ஸ்கிரிப்ட்க்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த திரைப்படத்தில் பிரபுதேவா மிக முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்பதுடன், மலையாள நடிகர் பகத் பாசில் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. தற்போது அந்த டீசர் யூடியூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இருப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தமது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த திரைப்படம் பற்றிய புதிய தகவலும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் குறிப்பிட்டிருக்கிறது.