'யுவன் சார் நோட் பண்ணுங்க!'.. இந்த பாட்டுக்கு இப்படி ஒரு FAN-ஆ? சுட்டிப் பெண்ணின் VIRALVIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் அண்மையில் வெளியாகியது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ரெஜினா காசண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்தியாசமான காமெடி ஹாரர் மற்றும் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தில் கண்ணுங்களா செல்லங்களா என்கிற பாடல் இடம்பெற்றுள்ளது. இசை பட நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்த இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ இசைதான். அந்த இசைக்கு சொந்தமான யுவன் சங்கர் ராஜாவின் இசையில் மற்றும் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

காவல் நிலையத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வீட்டு பணியாளர்கள் என்னவெல்லாம் பொய் சொன்னார்கள் என்பது பற்றி எஸ்.ஜே.சூர்யா பாடுவது போல் அமைந்திருக்கும் இந்த பாடலுக்கு சுட்டிப் பெண் குழந்தை நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘க்யூட் டா பாப்பா’ என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “அப்படியே தலயோட இந்த படத்தயும் மே 1-ஆம் தேதி ரீரிலீஸ் பண்ணா.. Fans கடமைப் பட்டிருப்போம்” - அஜித் பட இயக்குநர் கோரிக்கை!

தொடர்புடைய இணைப்புகள்

Little girl viral dance for Nenjam Marappathillai Song SJSuryah

People looking for online information on Selvaraghavan, Sj suryah, Yuvan Shankar Raja will find this news story useful.