ஜன.26ம் தேதி OTT ரிலீஸ் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. FULL LIST ரெடி!.. லீவு நாள்ல ஜமாய்ங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், நாளை (ஜனவரி-26) அன்று என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Aaha (2021)

ஆஹா என்பது பிபின் பால் சாமுவேல் இயக்கிய 2021 ஆம் ஆண்டு மலையாள மொழி ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாகும். Zsa Zsa புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் பிரேம் ஆபிரகாம் தயாரித்த ஆஹா, பிபின் இயக்குனராக அறிமுகமாக, இந்திரஜித் சுகுமாரன் நாயகனாக நடிக்க, அஸ்வின் குமார், மனோஜ் கே. ஜெயன், அமித் சகலக்கல் மற்றும் சாந்தி பாலச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டோபிட் சிராயத் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். Zsa Zsa புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் பிரேம் ஆபிரகாம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சயனோரா பிலிப் மற்றும் ஷியாத் கபீர் இசையமைத்துள்ளனர். Zee5யில் இந்த படம் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

படவா ராஸ்கல் (2021)

படவா ராஸ்கல் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான கன்னட மொழி நகைச்சுவை திரைப்படமாகும், இது குரு ஷங்கர் அறிமுக இயக்கத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் டாலி பிக்சர்ஸ் பேனரின் கீழ் நடிகர் தனஞ்சய் தனது முதல் தயாரிப்பாக தயாரித்தார். குஜ்ஜல் புருஷோத்தம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் தனஞ்சய், அம்ருதா ஐயங்கார், ரங்காயண ரகு, நாகபூஷனா மற்றும் தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். VOOT தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.

ஐயோ.. அது நான் இல்லைங்க! அவனை விடாதீங்க! பதறிய வலிமை STUNT மாஸ்டர் திலீப் சுப்பராயன்!

அர்ஜுனா பால்குனா

அர்ஜுனா பால்குனா என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி கிரைம் காமெடி திரைப்படம். இப்படத்தை தேஜா மார்னி எழுதி இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீ விஷ்ணு மற்றும் அமிர்தா ஐயர் நடித்துள்ளனர். இந்த படம் 31 டிசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தற்போது அல்லு அர்ஜூனின் ஆஹா ஒடிடியில் வெளியாக உள்ளது.

மாணவி லாவண்யா வழக்கு : தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி பரபர அறிக்கை விட்ட கமல்ஹாசன்!

Bro Daddy (2022)

ப்ரோ டாடி, பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நாளை வரவிருக்கும் மலையாள மொழி நகைச்சுவை திரைப்படம். ஆசிர்வாத் சினிமாஸ் மூலம் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார், ஸ்ரீஜித் என் மற்றும் பிபின் மாலிகல் ஆகியோரின் திரைக்கதையில், இப்படத்தில் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் மீனா, கல்யாணி பிரியதர்ஷன், லாலு அலெக்ஸ், கனிஹா, ஜெகதீஷ், சௌபின் ஷாஹிர், மல்லிகா சுகுமாரன் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.  15 ஜூலை 2021 அன்று தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு 44 நாட்கள் நீடித்து, அக்டோபர் 6, 2021 அன்று முடிவடைந்தது. Bro Daddy நேரடியாக Disney+ Hotstar இல் நாளை (26 ஜனவரி 2022) வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

List of Tamil Telugu Malayalam movies releasing on OTT

People looking for online information on திரைப்படங்கள், Bro Daddy, Diney Plus Hotstar, List of Tamil Telugu Malayalam movies, OTT, OTT Release, Voot, Zee5 will find this news story useful.