"உத்தமவில்லனுக்கு பதில் பாபநாசம் தான் பண்ண வேண்டியது"..- மனம் திறந்த லிங்குசாமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குனர் N.லிங்குசாமி.

Advertising
>
Advertising

அண்மையில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான வாரியர் திரைப்படத்தை தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.

இயக்குனராக மட்டுமல்லாமல், திருப்பதி பிரதர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் லிங்குசாமி.‌

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி, பையா, பட்டாளம், வேட்டை, கும்கி, வழக்கு எண் 18/9, இவன் வேற மாதிரி, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, அஞ்சான், உத்தம வில்லன், ரஜினி முருகன் ஆகிய படங்களை தயாரித்து இருந்தார்.

இந்நிலையில் பிகினிங் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லிங்குசாமி உத்தம வில்லன் படம் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். லிங்குசாமி பேசியது,  "உத்தமவில்லன் திரைப்படம், திருப்பதி பிரதர்ஸ்க்கு பொருளாதார ரீதியாக சில பின்னடைவுகளை ஏற்படுத்தியது நிஜம் தான். கமல் சார் மிகுந்த ஈடுபாடு கொண்ட செய்த படம் உத்தம வில்லன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால் பன்றேன்னு சொல்லி பண்ணாங்க. நாங்கள் கேட்டு போன படம் பாபநாசம். போஸூம் பாபநாசம் படம் பண்ண தான் ஆசைப்பட்டார். கமல் சாரும் ஒரு நல்ல ஆக்சன் கதை சொன்னார், அதையும் பின்னர் கைவிட்டாச்சு.  போஸ்ஸை சமாளிச்சு உத்தம வில்லன் படத்தை நான் தான் கமல் விரும்புவது போல் எடுக்கட்டும் என்று சொன்னேன்".  என லிங்குசாமி பேசினார்.

கமல் நடிப்பில் உத்தம வில்லன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. நடிகர் ரமேஷ் அரவிந்த் இந்த படத்தை இயக்கி இருந்தார். ஆண்ட்ரியா, பூஜா குமார், நாசர், பார்வதி திருவொத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் வெளியானது.

"உத்தமவில்லனுக்கு பதில் பாபநாசம் தான் பண்ண வேண்டியது"..- மனம் திறந்த லிங்குசாமி வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lingusamy Speech about Uthama Villain and Papanasam Movies

People looking for online information on Lingusamy, Papanasam, Uthama Villain will find this news story useful.