லிங்குசாமி இயக்கும் புதிய படத்தின் தமிழக RELEASE உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார்.

Advertising
>
Advertising

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு … 'RAPO-19' என்ற டைட்டிலோடு ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை இது. ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'மிருகம்' ஆதி பினிஷெட்டி இதில்  வில்லனாக நடிக்கிறார்.

ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம்  ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 'தி வாரியர்' என்று படத்துக்கு டைட்டில் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நேற்று வெளியிட்டிருக்கிறார்கள்.

சாய்பல்லவியின் BTS மேக்கப் வீடியோ! பாக்குற நமக்கே கஸ்டமா இருக்கே!

 


'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்' பேனர் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் இருவரும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு,  என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் அதிரடியாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைத் தந்த 'சீட்டிமார்' படத்தைத் தொடர்ந்து வரும் படம் என்பதால் ரசிகர்களிடமும் பெரிய ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்காரில் தமிழ் படங்கள் இதுவரை செய்யாத சாதனையை நிகழ்த்திய ஜெய் பீம்! முழு தகவல்

'கிருத்தி ஷெட்டி' தான் ஹீரோயின்.முக்கிய கதாபாத்திரத்தில் 'அக்ஷரா கவுடா' நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பிளஸ் ஆக இருக்கும். அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படம் மூலம் தமிழ் திரை ரசிகர்களுக்கு  மற்றுமொரு அதிரடி நாயகனாக சென்னையில் பிறந்து வளர்ந்த ராம் பொத்தினேனி வருவார் என்பது நிச்சயம். ஸ்ரீனிவாசா சித்தூரி அவர்களின் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தின் தமிழக உரிமையை பவன் குமாரின் ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

Lingusamy movie tn theatrical rights bagged by Masterpiece

People looking for online information on கிருத்தி ஷெட்டி, தி வாரியர், ராம் பொத்னேனி, Lingusamy, The Warrior movie will find this news story useful.