பிரம்மாண்ட பொருட் செலவில் அடுத்த படம்.. ஷூட்டிங்கை தொடங்கிய லிங்குசாமி.. படக்குழு விபரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார் தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்.

ரன், ஆனந்தம், பையா, வேட்டை, சண்டக்கோழி 2 பாகங்கள் என பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் N.லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பினை, தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். அன்பறிவ்  சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். சாய் மாதவ் புர்ரா மற்றும் பிருந்தா சாரதி வசனம் எழுதுகின்றனர்.

பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Lingusamy directorial bilingual Ram Pothineni DSP

People looking for online information on Devi sri prasad, DSP, Lingusamy, Ram Pothineni will find this news story useful.