தெலுங்குல RRR, கன்னடத்துல KGF பிரம்மாண்டம்னா.. தமிழ்ல அது "வாடிவாசல்" - கலைப்புலி தாணு EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது உள்ளிட்ட பல பிரத்தியேக தகவல்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நம்மிடையே பகிர்ந்துள்ளார். 

Advertising
>
Advertising

Also Read |  ”நம்ம பெஸ்ட்ட #AK62-ல ...” – Mid Night-ல அனிருத்தின் பிறந்தநாள் வாழ்த்து… Viral Tweet!

வாடிவாசல் எதிர்பார்ப்பு…

தாணு- வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் மெஹா ஹிட் வெற்றிக்குப் பிறகு,  சூர்யா – வெற்றிமாறன் – தாணு கூட்டணியில் வாடிவாசல் படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது அதிகமாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருவதாலும், சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் படத்தி கவனம் செலுத்தி வருவதாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் இடையில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டு இருக்கின்றன. வாடிவாசல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை தழுவி உருவாக உள்ளது.

வைரலான Test shoot….

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த படப்பிடிப்பின் போது சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். டெஸ்ட் ஷூட்டில் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக இருக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் ஷூட்டில் டாணாக்காரன் இயக்குனர் தமிழ், கருணாஸ் மற்றும் நடிகர் சூரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த படத்தில் இயக்குனர் அமீர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளோடு பழகி வருகிறார்.

வாடிவாசல் எப்போது…? - தாணு Exclusive

வாடிவாசல் பற்றி பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்தாலும், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் வாடிவாசல் படத்தைத் தயாரிக்க உள்ள கலைப்புலி தாணு Behindwoods- இடம் பிரத்தியேகமாக சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எப்படி கன்னடத்துல பிரசாந்த் நீல் & KGF ஒரு பிரம்மாண்டமோ, தெலுங்குல எப்படி ராஜமௌலி &  RRR ஒரு பிரம்மாண்டமோ… அதுபோல தமிழ்ல பிரம்மாண்டம்னா வெற்றிமாறன்  & வாடிவாசல் தான். காத்திருந்து பாருங்க” என தங்கள் படம் குறித்து நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

தெலுங்குல RRR, கன்னடத்துல KGF பிரம்மாண்டம்னா.. தமிழ்ல அது "வாடிவாசல்" - கலைப்புலி தாணு EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Like RRR, KGF in Tamil its vaadivaasal Dhanu Exclusive

People looking for online information on Kgf 2, RRR, Suriya, Vaadivaasal Dhanu, Vetrimaran will find this news story useful.