நடிகர் சிம்பு கடந்த ஆண்டு பொங்கல் சமயத்தில் நடித்திருந்த ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குக்கு வந்து சிம்புவின் ரீஎண்ட்ரி டிரீட்டாக அமைந்தது.
வெந்து தணிந்தது காடு
இதனைத் தொடர்ந்து அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி வசூல், ரீமேக் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், ஓடிடி ரிலீஸ் என அனைத்து நிலைகளிலும் வெற்றிகளை குவித்துவருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் சிலம்பரசன் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்களை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தொடர்ந்து கௌதம் மேனன், சிலம்பரசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
படக்குழுவினர்
ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கவிஞர் தாமரை பாடல் எழுத, கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர்.
முன்னதாக திருச்செந்தூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவின் கெட்டப்பை பார்த்து பலரும் வியந்துபோயினர். இந்த படத்திற்காக முதல் முறையாக எழுத்தாளரும் பிரபல வசனகர்த்தாவுமான ஜெயமோகன் கவுதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்துள்ளார்.
3 கட்ட படப்பிடிப்பு
முன்னதாக இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதன் பின்னர் சென்னையிலும் முழுவீச்சில் நடந்தது. அந்த சமயத்தில் நடிகர் சிம்புவும், கவுதம் மேனனும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களிடையே வைரலானது.
ஆடியோ ரைட்ஸ்
இதனிடையே இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஒரு நல்ல தொகைக்கு கைப்பற்றியதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக உள்ளதாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிரச்செய்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறிவந்தனர்.
ட்ரெண்டிங்
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பேசி வருவதுடன், இப்படத்தின் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். மேலும் சிலம்பரன் ஹேஷ்டேகையும் சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.