டோலிவுட்டின் சக்ஸஸ்ஃபுல் இயக்குனர் புரி ஜகன்நாத், தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டெட் நடிகர் விஜய் தேவரகொண்டா- இந்த இருவரும் இணைந்த படம்தான் லைகர் (Liger). இதில் விஜய்க்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், லைகர் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இப்படத்தின் முக்கியமான காட்சிகள் 40 நாள் ஷெட்யூலை மும்பை உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டார் இயக்குனர். இந்நிலையில் கோவிட் 19 பிரச்சனை மும்பையில் அதிகமாக இருப்பதால் தயாரிப்பை ஹைதராபாத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளார்.
இது குறித்த தகவலை சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்தனர், "மும்பை நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நகரமாக இருப்பதால், ஹைதராபாத்தில் படத்தின் அடுத்த கட்டப் பகுதிகளை படமாக்கம் செய்யவிருக்கிறோம். படத்தின் ஒரிஜினல் பின்னணியான மும்பையை உள்ளபடியே பிரதிபலிக்கக் கூடிய செட் வொர்க்கில் தற்போது இயக்குனர் பணியாற்றி வருகிறார். அது முடிந்ததும் விரைவில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும்" என்றனர்.
கரண் ஜோஹர் வழங்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா மார்ஷியல் ஆர்ட் கலைஞராக நடிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளிலும் லைகர் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.