LIFE OF பழம்: புது போஸ்டருடன் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 3-வது சிங்கிள் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஓவியா, சினேகா, சங்கீதா, பாபா பாஸ்கர்... பிரபல சேனலில் கோலாகலமாக தொடங்கிய நடன நிகழ்ச்சி.!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில்  பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது.

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று புதிய போஸ்டர் மூலம் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது.

'லைப் ஆஃப் பழம்' எனும் தலைப்பில் இந்த பாடல்  அமைந்துள்ளது. மேலும் தனுஷ் பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளார். இந்த  சிங்கிள் பாடல் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

நாளை ஜூலை  27 ஆம் நாளன்று தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த பாடலை படக்குழு வெளியிட உள்ளது.

இப்படத்திற்கு ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read | “ஒத்தக் கால்ல ஃபைட் .. டான்ஸ்..” - புதிய படம் குறித்து பிரபுதேவா

தொடர்புடைய இணைப்புகள்

Life of Pazham Dhanush Thiruchitrambalam Movie 3rd Single Song

People looking for online information on Dhanush, Life of Pazham, Thiruchitrambalam Movie, Thiruchitrambalam Movie 3rd Single Song will find this news story useful.