“LIFE மன்னிக்க கூடியதா இல்ல”.. அட நம்ம EX கண்ணம்மா REAL -ஆவே இப்படிதானா? வைரல் ஆகும் POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரோஷினி ஹரிப்பிரியனை விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் ‘கண்ணமாவாக’ பலரது இதயத்தை வென்றார்.

Advertising
>
Advertising

தனக்கே உரிய உடல்மொழி மற்றும் கண்ணாலேயே காட்சி மொழியில் கலக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் கண்ணம்மா எனும் ஃபிக்‌ஷன் கேரக்டருக்கு உயிர் கொடுத்தவர் என்று சொல்லலாம். பல பெண்களுக்கு உத்வேகம் தரும் இவரது தத்துவார்த்த பேச்சுகளை அவ்வப்போது சீரியல் காட்சிகளில் காண முடியும்.

பாரதி தம்பியின் வசனத்தை உள்வாங்கி பாரதியாராக வேடமிட்டு கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் பேசிய வசனங்கள் உட்பட கண்ணம்மா கதாபாத்திரம் பேசிய பல வாழ்க்கை தத்துவங்கள், ‘இதை ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாமே!’ என்று சொல்வது போல், அனைவரின் வாழ்வோடும் ஒத்துப் போகும் அனுபவ மொழிகளாக இருப்பதை, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரத்தை, பிரபல மாடலான வினுஷா ஏற்று நடித்து வருகிறார். முன்னதாக தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு விலகியதற்காக ரசிகர்களிடையே ரோஷினி ஹரிப்பிரியன் வருத்தம் தெரிவித்து வீடியோவை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் ரோஷினி ஹரிப்பிரியன் தமது சில புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், தமது இன்ஸ்டாகிராமில் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், “வாழ்க்கை எளிதாகவோ அல்லது மன்னிக்கக்கூடியதாகவோ இல்லை.. நாம் மேலும் வலிமையடைவோம், நெகிழ்ச்சியடைவோம்.” என்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பழைய கண்ணம்மாவாக திரும்பி வாருங்கள் என்று சொல்லி கமெண்டுகளில் அன்புமழையை பொழிந்து வருகின்றனர். பலரும் நிஜ வாழ்விலும் நம் Ex கண்ணம்மா வாழ்க்கை அனுபவங்களை சொல்வதில் பின்றாங்கப்பா என பாசிடிவாக பேசிவருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Life doesnt get easier Bharathi Kannamma roshini haripriyan post

People looking for online information on Bharathi Kannamma Serial Promo today, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Roshini Haripriyan, Trending, Tv Serial, Vijay Television, Vijay tv will find this news story useful.