நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்.
தொழில்முறை தயாரிப்பாளரும், மீடியா பிரபலமுமான இவர் அவ்வப்போது பிரபலங்களுடன் நேர்காணல் செய்வதும் உண்டு. பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் தனித்துவமான ஃபேட்மேன் ஷோவில் கலக்கும் ரவீந்தர் தற்போது தமது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை நிறுவியுள்ளார்.
புதிய அலுவலகத்திற்கு சென்ற கையோடு படத்துக்கான பூஜையும் நடந்துள்ளது. பரத், ஜனனி ஐயர், மிர்ச்சி செந்தில், மஹாலக்ஷ்மி நடிக்கும் “முன்னறிவான்” என்று தலைப்பிடப் பட்டுள்ள இந்த படத்தை விஜய்ராஜ் இயக்குகிறார். இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் சின்னி ஜெயந்த், அசார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படம் தொடர்பான இதர விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.