ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Also Read | சர்தார் படத்தின் வெற்றி.. நடிகை ரஜிஷா வெளியிட்ட வைரல் ஃபோட்டோ.. கமெண்ட் செய்து அசத்திய லைலா!
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் முதல் 40 நாட்களுக்கு நடக்க வேண்டிய சண்டைகள் அனைத்தும் முதல் வாரத்திலேயே நடந்து விட்டதாக கமல்ஹாசன் கடந்த வாரத்தில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி அசிம் ஆயிஷா சண்டை, தனலட்சுமி ஜனனி சண்டை, ஜனனி ஆயிஷா சண்டை, விக்ரமன் அசீம் சண்டை என பல விதமான சண்டைகள் பலவிதமான டாஸ்குகள் விஸ்வரூபம் எடுத்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது பொம்மை டாஸ்க் உருவெடுத்திருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த மணிகண்டன் ராஜேஷூம் ஒரு கணம் ஆவேசமானதை காண முடிந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனலட்சுமி பிக்பாஸ் வீட்டுக்குள் ரச்சிதா உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய அருகில் ரச்சிதா மற்றும் ஷிவின் கணேசன் இருக்க, அப்போது பேசும் தனலட்சுமி பொம்மை டாஸ்கின் போது நடந்ததை பற்றி விவரித்து கூறுகிறார். அதில், “அசீம்தான் அனைவரையும் தள்ளிவிட்டு டால் எடுத்தார். நான் யாரையும் தள்ளிவிடவில்லை. அப்படி நான் தள்ளிவிட்டு கீழே விழுந்து விட்டார்கள் என்று என் மீது பழி சுமத்தினால், கமல் சார் குறும்படத்தை போடட்டும். அப்படி நான் யாரையாவது தள்ளிவிட்டு கீழே விழுந்ததாக அதில் இருந்தால் நான் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறேன். அவ்வாறு நடக்கவில்லை என்றால் அனைவரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறுவதை காண முடிகிறது.
முன்பே சொன்னது போல் இந்த பொம்மை டாஸ்க் என்பது ஏதோ சிறுவயது காரர்கள் விளையாடக்கூடிய டாஸ்க் மாதிரி தொடங்கப்பட்டாலும், போகப்போக விஸ்வரூபம் எடுக்கும். இந்த பொம்மை டாஸ்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் நீயும் பொம்மை நானும் பொம்மை என்கிற இந்த டாஸ்கின் பெயருக்கிணங்க வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்துவார்கள் என்பதால் ஆட்டம் சூடுபிடிக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
Also Read | "இந்திய சினிமாவில் MASTERPIECE".. 'காந்தாரா' படம் பார்த்து வியந்த ரஜினிகாந்த்! வைரல் ட்வீட்